என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

குயிலின் பட்னி சங்கீதமாகி

ஒரு காய்ந்த ரொட்டித் துண்டை
அதன் துணையாள் தூக்கி வந்ததை
காக்கை கண்டு வழக்குப் போட்டது.

தென்னையைத் திட்டி
குயிலுக்கு எழுதிய கடிதத்தில்
குறித்துக்காட்டிய செய்தியை
வாசித்துக் காட்டிய காககம்
நெருப்பாகச் சுட்டது தனக்கு என்றது.

சுள்ளியைச் சுமந்தபடி
காகம் அதன் கூட்டின் ஜன்னலோரம்
குயில் தனித்துப்போய் நின்றதைக் கண்டு
கண்ணிரை வெள்ளமாக்கி.

ஒரு முறை காலின் எசக்கம் அறுந்து
காகம் குடிகாரனாய்ப் பறந்ததை
குயிலோ ரசித்ததைக் கண்டு.

பெருமையின் உச்சியில் ஜொலித்து
நிலம் கொடுத்த வீறாப்பை
காற்றின் சுழற்சியில் கெளிந்ததில்
தென்னையோ தன்னை மறந்திருக்கலாம்.

குயிலுக்கு அதன் முட்டைதான் பெரிது
தான் உழைத்துக் கட்டிய
மனையின் அழிவுபற்றி
அழுது அழுது
காலம் உறைவதாக அண்டங்காகம்
கதைத்துத் தீர்த்தது.

இன்னும் இன்னம்
சுள்ளிகளைத் தெரிகையில்
நெஞ்சு வெடித்து
தென்னைகளைச் சாய்த்துவிடும்.
மூச்சுக் காற்றக்குப் பலத்தைக் காட்டி.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா