என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

எவரும் பூசாத சுண்ணாம்பு

படித்தறிதல் கடமை
விளக்குத் திரியின் இறுதி மின் பூச்சி
வாலைக் கிளப்பி மறையும் வரையும்
எலியின் தேசத்தைப் பற்றி.

நிலவில் ஒழுகிய தேனை
ஒரு பானையில் சுமந்த
வெட்டுக்கிளியின் வாயிலிருந்து
வழிந்தோடும் பொழுது.

கூழா மரம் அவித்துப் போட்ட
கிழங்குமா புட்டியின் மணம்
இப்போதும் மணக்காமலில்லை
மணம் ஒரு வகையாக
மூக்கில் நுழைந்து
வயிற்றை ஒரு நாள் புரட்டிக் கழித்தது.

அடம்பிடித்த குழந்தையின் கண்கள்
செம்பகத்தை அழைத்தெடுத்த
படித்துக் காட்டியது
மூக்கால் ஒர் ஆறு குறக்கறுத்து
நாட்டின் சில பகுதிகளை
சீரில் இருந்து அகற்றியது.

வயதும் பொழுதும்
சிரட்டைத் தும்புகளாயின.

எவரும் பூசாத சுண்ணாம்பின்றி
வாய் சிவந்து
வெற்றிலை மென்று துப்பிய
கொரூரங்கள் அற்ற
பூமியில் ஒரு மலர் பிரசவமாவதற்காக
பாறைகளைத் தகர்க்க வேண்டியதாய் இருக்கின்றது.

வெய்யில் காலத்தில் குளிரின் வறுமை
எவனுக்கும் புழுக்கமாகிவடுவதைப்போல
தேசத்தின் எறும்பின் நிலத் துண்டும்
வாழ்வியலை வாட்டிடலாம்.

எறும்பும் குளிர்த்திப் பூச்சியும்
என்னோடு வாழ்ந்து போகட்டும்
சீனிப் போத்தல் திறந்துகிடக்கிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா