என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

செத்த குருவி

றோட்டில் விழுந்தது மூச்சற்று ஒரு குருவி
இறகுதிர்ந்து நசிந்து
சொண்டு கழன்று
முகத்தில் கீருண்ட காயம்..
ஒருத்தனின் ஒருத்தியின்
செவிப்பறையைத் தொட்டு அரட்டி
நுழைந்தது காதுக்குள்
ஒரு பூச்சிபோல சென்று இறைந்தது
பின் எழுந்து உதறி
காற்றில் கரைந்தது கற்பூரக்கட்டி.

ஊருவாயில் நனைத்தபடி
ஒரு கடவாய் நீருக்குள் மிதந்து உமிழ்ந்தது
ஒரு சொல்
ஒரு பானை நீரைக் கொதிக்க வைக்கும் நெருப்பாக
ஓலை நெருப்பு பூப்போல மலர்ந்து
ஊரெல்லாம் பற்றியது.

இரத்தத்தை தயிருப் பானைக்குள் உறையவைத்து
இரவில் கூவுவான் தயிருக்காரன்
நரம்புகள் சும்மா விறைத்து
உடம்பின் பகுதியை நனைக்கும்.

பூனையும் எலியும் சண்டையில் மாட்டி
மனிதனின் தோளில் பாய்ந்த
குண்டொன்று வெடித்து அமைதியைத் திண்டது.
மனிதனின் குருதி ஆறாய்ப் பாய்ந்த
கிராமம் தாழ்ந்து
மாயும் கதை இனி எழுத வருமோ?
மயிலின் தோகையாய் உலகம் விரிந்து மகிழ்ந்திடட்டும்
யானையில் தாவி சாவரிக்கட்டும்.

இச்செய்தி இடுப்பு வலிநீக்கி
வேம்பொன்றில் முட்டி மூக்கின் முகம் உடைந்து
எங்கோ கிராமத்தில் புதைந்தது.

நாளை நான் ஊர் தாண்டி
உயிர் பிடுங்கி உள்ளங்கைக்குள்
அணைத்து மீளுவேன்.
இதற்குள் குதிரை பூட்டிய வண்டியொன்று
நெஞ்சுக்குள் ஓடும்.
ஒடுங்கிய பாலமாய் றோட்டு மறையும்.

பெயர் தரியாத குழந்தை
கத்துகிறது வீறிட்டு ஊர்ச்சாலையில்.

1 comment:

  1. வணக்கம் உங்களது படைப்புகள் அருமைங்க...யதார்த்தம் வாழ்கிறது...என் வாசிப்போடு.

    ReplyDelete

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா