என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

காக்காய்க் குளியல்

சிறகு அரும்பி துடித்தது காற்று
யுத்தம் பற்றிய செய்தியோடு
பூவுலகை மூடியது
காக்கையின் காலில் சிக்கியது.

கடல் வாகனம் கவனமாய்ச் செல்க
பன்னீர்க் குடம் வெடித்துவீறிட்டுக் கத்துகிறது
யுத்தம்.

நுனி நாக்கை மனிதனில் போட்டு
உப்புச் சுவை கண்டு வீசியது
யுத்தம்.
இதன் திருகுதாளம்
யாருக்கும் புரியாத நொடிமாதிரி கழிவாகி.

உண்மை பூமிக்குள் கொக்கரிக்கிறது
அதற்குள் அடை வைத்த முட்டை பொரித்து
யுத்தத்தின் பெரிய கண்கள் பிதுங்கும்போதே விளங்கும்.

எவன்,
எது?
எப்படி அழியும் என்று.

நிழற்குடை வாழ்வு
இசையின் சங்கீத வரிசைபோல கடத்தவதற்குள்
பெரிய அலையினுள்
ஜீவன்கள் கரைகின்ற போது
ஒரு பகுதி உர் அழுததே!

வீட்டுக் கூரை எரிகின்றபோது
ஒரு தென்னை கூத்தாடும் போது
ஒரு காக்கையின் திசை கெடும்போது
கடல் வாகனம் கவனமாய்ச் செல்க
யுத்தத்துக்குப் பால் கொடுக்கும் பூமி
காக்காய்க்கு குளியலுடன் ஒரு அகதிப் பெட்டியில்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா