என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Monday, August 23, 2010

புதிய பூ மரம்

பதவி
பின்னல் கதிரையில் அமர்கிறது.
பழகிய மனசு தூரப்படுகிறது
சகபாடிகள் எல்லாம் மூளை இல்லாத மனிதன் போல.

நாளுக்கு நாள் முகம் கறுத்து வருகிறது
மழையைச் சேரிக்கும் வானம் போல
கண்கள் சிவந்து போகின்றன.
பேட்டைத் துரத்தும் காமுகச் சேவல் மாதிரி
நிறை போதையில் தள்ளாடும் குடிகாரன் போல
பேச்சு நாக்கினில் சிக்கித் தடக்குகிறது

முன்னர் சகாவாக இருந்ததை மறந்து
முன்னர் அரட்டைக்கு ஆட் சேர்த்ததை மறந்து
பதவி
வெள்ளைப் பிடவையை நெசவுகிறது.
சகாக்களை வெளுக்கத் தொடங்குகிறது.

கதிரையில் மூட்டைப் பூச்சிகள்
குத்திக் கொண்டிருப்பதனால்
வளவில் புதிய பூமரம் ஒன்று பூக்கக்கூடும்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா