என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, July 3, 2010

எனது பாத்திரம் இதுவாகி

நேற்றும் பசி விழுங்கியது என்னை.
இன்னும் அது வயிற்றுக்குள் ஊடுருவி
அட்டகாசித்துக்கிடக்கிறது.

நான் ஏந்தும் பாத்திரத்தின் சரியான வடிவத்தை
எவரும் கண்டுகொள்ள மறுத்துப்போய்
நான் அணியும் உடையின்
அழுக்கைச் சுவாசித்தபடியாக
நழுவுகிறது மானிடம்.

என் குழந்தைகளின் வாழ்வின்; வடிவம்;
எனது வாழ்வின் வடிவம் பற்றியெல்லாம்
என் அழுகைக்குள் முடங்கிக்கிடக்க
என்னை அயராது பாடுபொருளாகிக் கிடக்கிறது
தனிமை.

பிசின் தள்ளிய முருங்கைக்காய் கறிபோல
வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் நகர்வதாக
ஒருவன் பேசினான்.

குயிலின் வழுவழுத்த தனம்
காக்கையின் கூட்;டை கள்ளத்தனமாக்கும்.
அழகிய குரலில் என்னதான் மிஞ்சும்.
ஒரு கூட்டிற்கு உழைக்க இயலாத வாழ்வு.

எனது பாத்திரம் இதுவாகி..............
என்னிடம் பேசுகிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா