என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, May 8, 2010

இடியும் ஓசைக்குள்

மழை அதிகமாகப் பொழியத் தொடங்கியது.
ஊருக்குள் மொத்திய அழுக்கை
கழுவிக் கொண்டு போய்
நரைபலி கொடுத்தது கடலுக்கு.

கடல் விம்மிப் புடைத்துக் கிடந்தது.
கடலுக்குள் கூடுகட்டிய மேகம்
பெரும்; பிரசவச் சத்தத்துடன்
கிராமம் முழுக்க மழையாக.
பங்கப்பட்ட ஒரு பெண்ணின் கோலமாக
கிராமம்.

கொஞ்ச நேரத்துக்குள்
காற்றில் படர்ந்த கொடி காதைச் சுற்றியது
தெரு விபத்தில்
சிறுவனின் உயிர் மழையில் கரைவதாக.

நெரிசலாய்ப்போன வாகனங்களுக்குள்
பயணியின் மூச்சு ஒடுக்கப்பட்டுச் சாலையை சபிக்கிறது.

மழை என்ற கழுவு நீர்
இல்லாது போனால்
எல்லா வகையான குருதியின் உறைவும்
எல்லா வகையான மரணத்தின் வாடையும்
மண்ணைவிட்டும் அழியாது
கறையாகிடும்.

விடிய எழும்
இடியும் ஓசையும் வேறு வேறு பிறப்பினை
உணர்த்துகின்ற இக்காலத்தில்.
குரும்பட்டிகளைப் கார்ந்த பிள்ளைகள்
குண்டுமணிகளைப் பொறுக்கிய குழந்தைகள்
ரவைகளையும் இனிப் பொறுக்குவர்.
மலிவாக மரங்கள் இதையும் உயிர்க்கும்.

இடியும் ஓசையில் மட்டும்
யார் யாரோ ஒதுங்கிய கோழியாகினும்
இப்போதைக்கு
மழை அழுக்குறுஞ்சியும் தான்.
மனிதனுக்காகவும்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா