என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, May 8, 2010

ஒரு நாள் உயிர்க்கும்

எல்லாக் கைகளும் ஓங்கும்.
எல்லா வாய்களும் பேசும்
எல்லாக் காதுகளும் சாய்க்கும்
எல்லாக் கண்களும் விழிக்கும்.

காலம் நகர
காலம் நதியாக
காலம் பசியாற
காலம் முழங்க
காலம் அன்பொழுக
காலம் மகிழ்ந்தேற

நாட்கள் யுத்தத்தை
நாட்கள் இரத்தத்தை
நாட்கள் மனிதத்தை
நாட்கள் வேடத்தை
நாட்கள் சோகத்தை

வென்று திளைக்க
மென்று விழுங்க
உண்டு கழிக்க

பொழுது விடியும்
மானிடம் பிறக்கும்
வல்லமை பேசும்

வீதி தனியாகக் கிடக்க
நானும் நீயும் சுதந்திரமாகப் பயணிக்க.
சில்லுக் கரத்தையில்
மாட்டைப்பூட்டிய படியாக
எழுந்து வருகிறது சூரியன்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா