என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, May 8, 2010

எனக்காகவே ஓர் எறும்பு

ஒரு சீனிக்கட்டியை இழுத்துச் செல்லதைப்போல
என்னை லாவகமாகப் பிடித்துச் செல்கிறது
ஓர் எறும்பு
என் செவிகள் இழுக்கப்பட்டு
தலையில்; குட்டுப் போட்டு அழைத்துச் செல்கிறது.
தலைமையிடம் நான்; பேசப்படுகிறேன்.

எனது ஒவ்வொரு அங்கங்களும் எறும்பின்
கோர நகங்களால் கிழிக்கப்பட்டு
துண்டுகளாக்கப்பட்டு
இனங்காண இயலாத ஒரு நிலத்தின் துளைக்குள்
அடக்கப்படுகின்றன.

தலைமை துவைத்தெடுத்த என் பாசம்
அவர் மேசையின் மீது
ஒரு மொட்டைக் கடிதமாக அல்லது
சுவர்களின் பூச்சுக்களில் பேசப்படுகின்றன.

மானம் என்பது உடையோடு; இருக்கும்வரை தான்
அழகிய கனவு, காணும்வரை தான்.
வெளிச்சம் இருளுக்காகவே என்பதை
எல்லா எறும்புகளும் மறந்தே விட்டன.

எலியின் மரண வேதனை பூனைக்கு
எங்கு தெரியப் போகிறது?

எனக்காகவே ஓர் எறும்பு படைக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா