புழுதி தங்காத பணிக்காக
நரக நெருப்பற்ற தொழில் நிலையத்திற்காக
கடல் நீரைப்போல தளும்பிக்கொண்டிருக்கும்
அல்லது வானவழி மேகமாய் பாய்ந்தோடும்
நான்; ஒதுங்குகின்ற
ஒவ்வொரு வாகையின் கிளையிலிருந்தும்
காகங்கள் எச்சமடித்துக்கொண்டே இருக்கின்றன.
மரம் சுகத்தைத் தருகிறது.
காகம் அதிர்ப்தியைத் தருகிறது.

No comments:
Post a Comment