என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Thursday, March 25, 2010

காற்று

காற்று கடற்கரையில் நின்றது.
பின் எழுந்து உதறிக் கொண்டு
கடைத்தெருவுக்கு வந்தது

டீக் கடையில் குந்திக் கொண்டு
செய்தி சொல்லிவிட்டு
என் வீட்டு ஜன்னல் பக்கம்
நழுவிவந்து உடைத்துப் பார்த்தது.

சகிக்காத காற்று ஆவேசம் கொண்டு
வாசலில் நின்ற
முருங்கையையும்
வாழையையும்
சரித்துவிட்டு மறைந்து போனது
அது
எக்காற்று என்று அடையாளம் தெரியாது.
நாளை வந்தாலும் யாரும் அறியமாட்டோம்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா