என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, May 8, 2010

புதைக்கப்படும்வரை

அவன் சுடப்பட்டுக்கிடக்கிறான்.
அவனில் நின்றும் எந்த மதத்தின்
குருதியும் நதியாகவில்லை.
அவன் சுடப்பட்டுக்கிடக்கிறான்.
அவனில் நின்றும் எந்த மதத்தின்
உயிரும் தென்றலாகவில்லை.
அவன் சுடப்பட்டுக்கிடக்கிறான்.
அவனில் நின்றும் எந்த மதத்தின்
பார்வையும் கருணையாகவில்லை..
அவன் சுடப்பட்டுக்கிடக்கிறான்.

மதமறியா ஈக்கள் இரைந்தன.
மதமறியா காகங்கள் கரைந்தன.
மதமறியா நாய்கள் குரைத்தன.
அவன் ஒரு மனிதன்.
ஒரு புல்வெளியில் சுடப்பட்டுக்கிடக்கிறான்.
புதைக்கப்படும்வரை
இன்னொரு மனிதன் மூக்கைப்
பிடித்துக்கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா