என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Tuesday, May 11, 2010

அதோ! ஒரு கிராமம் என்பது

புலர்வதற்குள்
நீண்ட இரவின் தூலியில் ஒய்யாரமாய் அயர்ந்த
அழகிய கிராமம் சிதைக்கப்பட்டது.
சிதறுண்ட கிராமத்தின் மூக்கு உதிரப்பட்டு
ஆளுமையின் ஒளி சிதைவுகளோடு.

இளம் மீசை பிடுங்கப்பட்டது.
அக்கினி பரவியபோது தெரிகெட்டு ஓடின மான்கள்.
பிணைந்த கரங்கள்
இறுகிய கபன் துணிகளோடு தொழப்பட்டன.
அம்மணமாக்கியபடியாக கூக்குரலில் முட்களும் சிக்கின.
அதோ! ஒரு கிராமம் என்பது.

சூரியனின் சலிப்பான உதயத்தில்
விரவிக்கிடந்த உடல்களின் உயிர்கள்
மலக்குள் மௌத்தோடு பயணமாகின.
கிராமத்தைவிட்டும் எங்கோ ஒளிந்து போயின
எல்லாப் படைப்புக்களும்.

மண் வர்ணமாகிக் கிடந்தது
கொதுப்பிய வெற்றிலைச் சாறாக.
அங்கே சதுப்பு நிலத்துக்குள்
அநாதரவாய்க் கிடந்த
ஓர் அப்பாவின் முதுகில் நின்றும் உந்திப் பறந்தது
ஒரு வெள்ளைக் குருவி.
பாங்கொலி வேறொரு கிராமத்திலிருந்து
காதோடு கலந்தபோது.
வானூர்திகளைவிடவும்
கழுகுகள் உற்சாகமாக வட்டமிட்டன.
நாக்குத் தள்ளிய நுரையில் கிராமம் நனைந்தது.

அதோ! ஒரு கிராமம் என்பது
ஊழையிடும் நாய்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.
வருடிய காற்றின் வழியே வாடை கிளம்பிக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசலில் மின்னிமறைந்தது சிறுவெளிச்சம்
பாங்கொலி நாளை கேட்கும் ஆயத்தமாக
அந்நியனாகாமல் அவசரமாக நகரவிளைகிறது
முஅத்தினின் பாதங்கள்.
நாம் தொழும் தளம் நஜீஸ் இல்லாமலிருக்க.
அதோ! ஒரு கிராமம் என்பது.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா