பெரும் முட்களால் அமைந்த
வேலியைத் தகர்க்க இயலாமல்
நரையும் திரையும் தொடங்கிவிட்டன.
மெல்ல மெல்ல
காற்றின் பெயரில்
எலவம் பஞ்சாக அலைகிறது மனம்.
ஒரு முடிவுக்காக
எல்லாப் பாதைகளும் பழகிவிட்டன.
எல்லா தேர்வுகளும் நடந்துவிட்டன.
நான் மிகச் சுவையாக
அருந்திக்கொண்டிருக்கிறேன்.
பழஞ்சோற்றுக் கரையலை
அன்றும்
இன்றுமாக.

No comments:
Post a Comment