என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Sunday, April 4, 2010

சில மனசுகளுக்குள்

எனக்குள்ளும் ஒவ்வொரு படையணியும்
சரியான வியூகம் அமைத்து
நகர்ந்து கொண்டிருக்கின்றன.
குண்டுகளும்
செல்களும்
வேட்டுக்களும்
இலக்கின் பக்கமே நிகழ்கின்றன.

மனசுகள் பொருத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ள
கோட்டைகள்.
இதற்குள் ஒளிந்து கிடக்கின்ற
போராட்டக் குழுவைத் தேடியபடியாக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அகம்பாவம்
போராட்டக் குழுவைப்போலக் கிடக்கிறது.
சில மனசுகளுக்குள்ளும்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா