என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Thursday, March 25, 2010

எனது மரணத்தின் மகிழ்ச்சி

பூனைவால் புல்லு மாதிரி
துறுத்திக்கொண்டு நிற்கிற கனவுகளுக்குள்ளும்
இது நிகழ்கிறது.

முண்டியடித்துக்கொண்டு புதைத்துவிட்டு
போடுகின்ற மூன்றுபிடி மண்ணும்
எனது உடலை மாத்திரமே உண்டுவிடும்.
எனது வாழ்வின் அடையாளத்திற்காக
ஓர் அடைக்கிலன் இனிமையாகப்
பாடிக்கொண்டிருக்கிறது.
எனது கைவிரல் இடுக்கிலிருந்து
கரை சேர்ந்த எனது எழுத்துக்களும்.

எந்தச் சுமையையும்
இறக்கிவிட்டுச் செல்லவில்லை.
எனது வண்டில்.
எனது மாடுகள் அசைபோடாமலேயே பயணிக்கின்றன.

எனது சொர்க்கத்தின் மண்ணை
யாரால் அபகரிக்க முடியும்.?
கனிகளை
நீரோடையை
மலர்களை

அதற்காகவே நான் வெறுமையாய்ப் பயணிக்கிறேன்.
மனசு
நரகத்தின் நெருப்பையும் ஞாபகம் செய்கிறது.
காலைமடக்கி நிமிர்த்துவதற்குள்
நரகம் எச்சரிக்கின்றது.

நான் மிக நிதானமாக என்னை ஓட்டுகிறேன்
நிரந்தரமான
நந்தவனத்தில்
எனது இன்பமனையை அமைக்கும் முயற்சியில்.

1 comment:

  1. சிலர் வார்த்தைகள் உயிரைக் கொல்லும்
    சிலர் வார்த்தைகள் உயிரை வெல்லும்
    உம் வார்த்தைகள் மனதை கிள்ளுகிறது

    ReplyDelete

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா