
எந்தக் கொசுவின் வாசலைப் பற்றியும்
அறியத் தேவையில்லை
எந்தப் பூனையின் இருப்பிடம் பற்றியும்
தேடத் தேவையில்லை
எந்தக் கிளியின் துவம்சம் பற்றியும்
பேசத் தேவையில்லை
எந்த மனிதனின் உழைப்புப் பற்றியும்
துலாவத் தேவையில்லை.
நம்மை நாம்
சுயவிசாரணை செய்துகொள்வோம்
எந்த மண்புழு
நமக்குள் நீந்துகின்றது என்று
எந்தப் பூரான்
நமக்குள் குத்துகின்றது என்று
எந்தக் கறையான்
நம்மை அரிக்கிறது என்று.
No comments:
Post a Comment