இறந்து கிடக்கிறான்.
அவன் ஆடையும்
அவன் துப்பாக்கியும் களையப்பட்டு
போர் முனையில் ஒரு சிப்பாய்.
அவன் குழந்தைகளும்
அவன் மனைவியும்
அழத்தெரியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அப்பா வருவார் என்ற
குழந்தையின் மறுமொழி
ஒரு நீண்ட கோடாகிறது.
போர் முனைக்கு
ஒரு சிப்பாயாக
அம்மா வழியனுப்பி வைக்கிறார்.
ஆழமாகப் பதித்த நெற்றி முத்தத்துடன்
அப்பாவைத் தேடிய மகனை.
No comments:
Post a Comment