என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Thursday, March 25, 2010

நினைவும் இன்னொன்றும்

பச்சையாகவே என்னில் படர்ந்தவைகளில்
பூச்சிகளும் புழுக்களும் பிடிக்கத் தொடங்கிவிட்டன.
சிறு காற்றும்
சில சில மனத்திற்குப் பிடித்த குருவிகளும்
பச்சைகளில் தங்கிச் செல்லும் என எண்ணினேன்.

மஞ்சள் நிறப் பூக்களும்
அதில் புதுமைகளும் தோன்றும் என கனவினேன்.
வெள்ளைகளெல்லாம் கறுப்பாகிவிட்டன.
இருண்ட வானத்தை தடுக்கமுடியாததால்
நிலத்தின் கண்முண்டை வீங்கத் தொடங்கிவிட்டது.

எது பொய்
எது மெய்
என்ற கேள்வியில் நித்திரை தெரிகெட்டுப்போகிறது.

இருளைக் கிழிக்கின்ற
இருளைச் சபிக்கின்ற
இருளை மெச்சுகின்ற தூக்கம்
ஒரு காலத்தில் தொட்டிலில் சுதந்திரமாகவே கிடந்தது
என்பது
நினைவும் இன்னொன்றுமாக.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா